ADDED : மார் 02, 2026 07:19 AM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே யாகப்பன்பட்டியை சேர்ந்தவர் ஜெனித்தா மேரி 36. இவர் குடும்பத்துக்கும்
அதே பகுதியை சேர்ந்த ஆரோக்கியசாமி 35, என்பவருக்கும் இடையே முன்விரோதம் உள்ளது. இதன் காரணமாக சில மாதங்களுக்கு முன் இரட்டைக்கொலை நடந்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து பகை மேலும் அதிகமானது. இந்நிலையில் ஜெனித்தாமேரி அப்பகுதியில் உள்ள கடைக்கு சென்ற போது ஆரோக்கியசாமி அரிவாளை காண்பித்து கொலை மிரட்டல் விடுத்தார். புகாரின் பேரில் ஆரோக்கியசாமியை கைது செய்து எஸ்.ஐ., கலையரசன் விசாரிக்கிறார்.
