ADDED : மே 14, 2026 05:40 AM

அ நிறம் | அளவு
நெய்க்காரப்பட்டி: பழநி அருகே வீட்டில் மான் கொம்பை பதுக்கி வைத்திருந்த 71 வயது முதியவரை வனத்துறையினர் கைது செய்தனர். பழநி அருகே பெரியம்மாபட்டியில் மான் கொம்பு பதுக்கி வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
வனச்சரகர் கோகுலகண்ணன் தலைமையில் வனத்துறையினர் ஆய்வு செய்தனர். விவசாயி பிச்சைக்காரன் 71, வீட்டில் மான் கொம்பு இருந்தது கண்டறியப்பட்டது. மான் கொம்பை பறிமுதல் செய்த வனத்துறையினர் பிச்சைக்காரனை கைது செய்தனர்.
