/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
குலுக்கல் நேரத்தில் பொருட்கள் சூறை சீட்டு நடத்தியவர் கைது
/
குலுக்கல் நேரத்தில் பொருட்கள் சூறை சீட்டு நடத்தியவர் கைது
குலுக்கல் நேரத்தில் பொருட்கள் சூறை சீட்டு நடத்தியவர் கைது
குலுக்கல் நேரத்தில் பொருட்கள் சூறை சீட்டு நடத்தியவர் கைது
ADDED : பிப் 08, 2026 06:15 AM
வடமதுரை: அய்யலூரில் குலுக்கல் முறையில் பரிசு பொருட்கள் தருவதாக வார தவணை முறையில் பணம் வசூலித்த நிலையில் குலுக்கல் நேரத்தில் பொருட்கள் சூறை போனது.
அய்யலுாரில் பர்னிச்சர் கடை நடத்திய குழு பல்வேறு கிராமங்களில் மக்களிடம் வாரம் ரூ.300 என 25 வாரங்கள் வசூலித்தனர்.
26வது வாரம் நடக்கும் குலுக்கலில் டூவீலர், பிரிட்ஜ், டிவி, ஜிமிக்கி தோடு உள்ளிட்ட பல பொருட்கள் வழங்கப்படும் என கூறியிருந்தனர்.
இதற்காக அய்ய லுாரில் பரிசு குலுக்கல் நடத்த தனியார் மண்டபத்தில் பொருட்களுடன் ஆயத்த மாகினர்.
அப்போது அங்கு வந்த குஜிலியம்பாறை பகுதியை சேர்ந்தவர்கள், தாங்கள் ஏற்கனவே இவர்களிடம் பணம் செலுத்தி பொருட்களை கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்தவர்கள் எனக்கூறி பல பொருட்களை சரக்கு வேனில் அள்ளி சென்றனர்.
சீட்டு பணம் செலுத்தி குலுக்கலுக்காக காத்திருத்தவர்கள் அதிர்ச்சியாகினர்.
இவர்களில் பலரும் தங்கள் கட்டிய பணத்திற்காக கிடைத்த பொருட்களை எடுத்து சென்றனர்.
குலுக்கலும் நடக்காமல், பொருளும் கிடைக்காமல் ஏமாற்றமடைந்த பணம் செலுத்தியோர் சீட்டு குழுவினருடன் வாக்குவாதம் செய்தனர்.
சீட்டு குழுவை சேர்ந்த சிலர் தப்பிய நிலையில் சிக்கிய புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி சரவணனை 43, வடமதுரை போலீசார் கைது செய்தனர்.

