/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பால் கடையில் மது விற்றவர் போலீசில் ஒப்படைப்பு
/
பால் கடையில் மது விற்றவர் போலீசில் ஒப்படைப்பு
ADDED : ஜூலை 17, 2025 02:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை:செங்குறிச்சி அருகே பால் கடையில், மது விற்றவர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.
திண்டுக்கல் மாவட்டம், செங்குறிச்சி அருகே குரும்பபட்டியில் தமிழர் தேசம் கட்சியினரும், பொதுமக்களும் இணைந்து, அப்பகுதியில் செயல்படும் டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக்கோரி, நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது, அதே பகுதியில் உள்ள பால் கடையில் மது விற்பனை நடப்பதை அறிந்தனர். இதையடுத்து கடைக்கு சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள், அலெக்ஸ் என்பவரை பிடித்து, வடமதுரை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.