நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை: காணப்பாடி அய்யப்பன் கோயிலில் 37ம் ஆண்டு மண்டல பூஜை விழா நடந்தது. சுவாமிக்கு சிறப்பு பூஜைகளை தொடர்ந்து அன்னதான, குத்து விளக்கு பூஜைகள் நடந்தது.
அன்னதான பூஜைக்காக 2000 கிலோ அரிசி, 100 கிலோ நிலக்கடலை பருப்பு, 110 கிலோ புளி உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தி மெகா புளியோதரை தயார் செய்யப்பட்டது.
ஆயிரக்கணக்கில் பக்தர்கள் பிரசாதம் பெற காத்திருந்தனர்.
ஏற்பாட்டினை கோயில் நிர்வாகிகள் நடராஜன், சுப்பையா தலைமையிலான விழா குழுவினர் செய்திருந்தனர்.

