/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நசிந்து வரும் நுாற்பாலை தொழில்களால் பாதிப்பு! ஏராளமானோர் வேலை இழக்கும் அபாயம்
/
நசிந்து வரும் நுாற்பாலை தொழில்களால் பாதிப்பு! ஏராளமானோர் வேலை இழக்கும் அபாயம்
நசிந்து வரும் நுாற்பாலை தொழில்களால் பாதிப்பு! ஏராளமானோர் வேலை இழக்கும் அபாயம்
நசிந்து வரும் நுாற்பாலை தொழில்களால் பாதிப்பு! ஏராளமானோர் வேலை இழக்கும் அபாயம்
ADDED : டிச 23, 2025 07:24 AM

வேடசந்தூர்:
திண்டுக்கல் மாவட்டத்தில் 200க்கு மேற்பட்ட நுாற்பாலைகள் உள்ள நிலையில் கூடுதல் மின் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு நடைமுறை சிக்கல்களால் நுாற்பாலைகள் நசிந்து வருகின்றன. மத்திய ,மாநில அரசுகள் போதிய உதவிகளை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
மாவட்டத்தில் வேடசந்துார், வடமதுரை, குஜிலியம்பாறை, திண்டுக்கல், நத்தம், நிலக்கோட்டை, வத்தலகுண்டு, பழநி உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளில் 300 க்கு மேற்பட்ட நுாற்பாலைகள் இயங்கி வருகின்றன. இந்த ஆலைகளில் வெளி மாவட்ட,மாநில தொழிலாளர்களும் பணியில் உள்ளனர்.
வட மாநிலங்களான குஜராத், மத்திய பிரதேஷ், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பஞ்சுகளை வாங்கி வந்து இங்கே நுாலாக, துணியாக, ஆடையாக மாற்றி ஏற்றுமதி செய்து வந்தனர். ஆனால் அதே வட மாநிலங்களில் தற்போது ஏராளமான புதிய நுாற்பாலைகள் அரசு மானிய உதவிகளுடன் உருவாகி விட்டன.அங்கே இருந்து பருத்தி பஞ்சை வாங்கி வந்து இங்கே துணியாக மாற்றி விற்பனை செய்வதற்கும், அவர்கள் அங்கேயே பருத்தி பஞ்சை வாங்கி துணியாக நெய்து விற்பனை செய்வதற்கும் இடையில் உற்பத்தி விலையில் தொழில் போட்டியை சமாளிக்க முடியவில்லை.
இவற்றையெல்லாம் சமாளித்து எழலாம் என நினைக்கும் போது தமிழக அரசு ஒரு யூனிட்டுக்கு ரூ.9.40 மின் கட்டணம் என உயர்த்தி விட்டது. இதனால் ஏராளமான சிறிய நுாற்பாலைகள் கட்டுபடியாகாத நிலையில் தங்களது பணியை நிறுத்தி விட்டன. ஏராளமான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். அமெரிக்கா இந்திய பொருட்களுக்கான இறக்குமதி வரியை 50 சதவீதமாக உயர்த்தியால் அமெரிக்கா ,ஐரோப்பிய நாடுகளுக்கு மட்டுமே ஆடைகளை ஏற்றுமதி செய்து வந்த நுாற்பாலைகள் விழி பிதுங்கி நிற்கின்றன. நுாற்பாலைகளின் பல்வேறு நெருக்கடிகளுக்கு தீர்வு காண மத்திய மாநில அரசுகள் விரைந்து முன்வர வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்துள்ளது .
@@மின் கட்டணத்தை குறைக்கலாம்
தமிழக அரசு மின் கட்டணத்தை தொடர்ந்து உயர்த்தி வருகிறது. இது ஒரு காரணமாக இருக்க இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் ஆடைகள் 60 சதவீதம் அமெரிக்க சந்தைக்குத்தான் செல்கிறது. அங்கே இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவீத வரிவிதிப்பால் தொழில்கள் நசிந்து விட்டன. ஏராளமான ஆலைகள் மூடும் நிலைக்குத் தரப்பட்டுள்ளன. இவற்றையெல்லாம் நிவர்த்தி செய்து மீண்டும் நுாற்பாலைகள் நல்ல முறையில் இயங்க வேண்டும் என்றால் தமிழக அரசு மின் கட்டணத்தை குறைக்க வேண்டும். மத்திய மாநில அரசுகள் நவீன இயந்திரங்களை பொருத்துவதற்கான மானிய கடன்களை வழங்க வேண்டும். அமெரிக்கா 50 சதவீத வரி விதிப்பில் 20 சதவீதத்தை மத்திய அரசு பங்களிப்பாக செலுத்த வேண்டும். அப்போதுதான் நுாற்பாலை தொழில் மேம்படும்.
எம்.விஜயகுமார், முதுநிலை துணைத்தலைவர், ஈஸ்ட் மேன் ஸ்பின்னிங் மில்ஸ், வேடசந்துார்.
*****

