தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ திண்டுக்கல்லில் மாரத்தான் போட்டி

 திண்டுக்கல்லில் மாரத்தான் போட்டி

 திண்டுக்கல்லில் மாரத்தான் போட்டி


ADDED : ஜன 25, 2026 05:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 25, 2026 05:59 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் நடக்க உள்ள அறிவியல் தொழில்நுட்பம், புத்தாக்க கண்காட்சி முன்னோட்டமாக விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நேற்று நடந்தது.

திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம், தனியார் அறக்கட்டளை சார்பில் தனியார் பள்ளியில் அறிவியல் தொழில்நுட்பம், புத்தாக்க கண்காட்சி ஜன.28 துவங்கி பிப். 3 வரை நடக்கிறது.

இதன் முன்னோட்டமாக விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடந்தது. பள்ளி, கல்லுாரி மாணவர்கள் என ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர். ஆண், பெண், பள்ளி மாணவர்கள், மாணவிகள் என 4 பிரிவுகளாக நடத்தப்பட்ட போட்டியை கலெக்டர் சரவணன் துவக்கி வைத்தார்.

ஆண்களுக்கான போட்டி எம்.எஸ்.பி., பள்ளி ஆடிட்டோரியத்தில் இருந்து துவங்கி ஜி.டி.என்.சாலை, ஏ.எம்.சி.சாலை, பஸ் ஸ்டாண்ட், மாநகராட்சி ரோடு, வெள்ளை விநாயகர் கோயில், மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை வழியாக மீண்டும் பள்ளி வரும் வகையில் 8.கி.மீ., துாரம் நடந்தது. பெண்கள், பள்ளி மாணவர்கள், மாணவிகளுக்கு ஜி.டி.என்.சாலை, ஏ.எம்.சி.சாலை, பஸ்ஸ்டாண்ட், மாநகராட்சி ரோடு, வெள்ளை விநாயகர் கோயில் வரை சென்று மீண்டும் அதேவழியில் பள்ளி வரும் வகையில் 4 கி.மீ. நடந்தது.

போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசு, ஊக்கத்தொகை வழங்கப் பட்டது.

கலந்து கொண்ட அனைவருக்கும் பங்களிப்பு சான்றிதழை கலெக்டர் சரவணன் வழங்கினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us