/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மரியன்னை பள்ளி 175வது ஆண்டு விழா
/
மரியன்னை பள்ளி 175வது ஆண்டு விழா
ADDED : ஜன 26, 2025 04:41 AM

திண்டுக்கல்: திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளி 175வது ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது.
இதன் துவக்க விழாவிற்கு திண்டுக்கல் மறைமாவட்ட ஆயர் தாமஸ் பால்சாமி தலைமை வகித்தார். இயேசு சபை மதுரை மறை மாநிலத் தலைவர் தாமஸ் அமிர்தம், திண்டுக்கல் மறை மாவட்ட முதன்மைக் குரு சகாயராஜ், மரியன்னை பள்ளிகளின் அதிபர் மரிவளன். தாளாளர் மரியநாதன் முன்னிலை வகித்தனர். சிறப்பு திருப்பலி நடந்தது.
தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பள்ளி முன்னாள் மாணவரும், முன்னாள் கலெக்டருமான அலாவுதீன், மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா பேசினர்.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உஷா, கல்வி அலுவலர் நாகேந்திரன், தொடக்க கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி, வட்டாரக் கல்வி அலுவலர் விஜயா, முன்னாள் மாணவர் கழக முதன்மைப் புரவலர்கள் குப்புசாமி, அரசன் சண்முகம், பாலசுந்தர், முன்னாள் மாணவர் கழகத் தலைவர் வீரமணி, திருவருட் பேரவை பொருளாளர் காஜா மைதீன், கால்பந்து கழக செயலாளர் சண்முகம், ஓய்வு ஆசிரியர் அலுவலர் சங்கச் செயலர் ராஜரத்தினம் கலந்து கொண்டனர்.
பள்ளி தலைமையாசிரியர் ஆரோக்கியதாஸ் நன்றி கூறினார். ஏற்பாடுகளை உதவித் தலைமையாசிரியர்கள் ஞானராஜ், ஜோசப் சேவியர், மரியலுாயிஸ் சேகர், பெரர் நோயல் ராஜ், ஜான் டேவிட், ஆசிரியர் அலுவலர் சங்கச் செயலர் பிரிட்டோ அமல்ராஜ், ஆரோக்கிய லாரான்ஸ் குழந்தைராஜ், மரிய ராஜேந்திரன், மைக்கில் ஜோசப் ராஜ் செய்திருந்தினர்

