/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தேசிய திறனறி தேர்வில் சாதித்த மரியன்னை பள்ளி
/
தேசிய திறனறி தேர்வில் சாதித்த மரியன்னை பள்ளி
ADDED : ஏப் 16, 2025 05:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : இந்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பில் நடந்த தேசிய வருவாய் வழித் திறனறி திண்டுக்கல் புனித மரியன்னை பள்ளியை சேர்ந்த 158 மாணவர்கள் பங்கேற்றனர்.
இதில் 79 மாணவர்கள் தேர்ச்சிப் பெற்றனர். மாநில அளவில் இப்பள்ளி மாணவர்கள் 2ம் இடம், மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தனர். தேர்ச்சி மாணவர்கள், பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கு பள்ளியின் அதிபர் மரிவளன், தாளாளர் எமரியநாதன், தலைமையாசிரியர் ஆரோக்கியதாஸ், ஞானராஜ், ஜோசப் சேவியர், தெரஸ்நாதன் பாராட்டு தெரிவித்தனர்.

