ADDED : பிப் 14, 2024 05:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குஜிலியம்பாறை : குஜிலியம்பாறை பல்லாநத்தம் காலனி மக்களுக்கான வீட்டுமனை பட்டா பெயர் மாற்றம் குறித்து மனு கொடுக்க சென்றபோது, தாசில்தார் தமிழ்ச்செல்வி மனுவை வாங்க மறுத்து பெட்டியில் போட சொல்லியதை கண்டித்து, மார்க்சிஸ்ட் சார்பில் குஜிலியம்பாறையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய குழு உறுப்பினர் ஜெயபால் தலைமை வகித்தார்.
மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்வராஜ், ஒன்றிய செயலாளர் ராஜரத்தினம் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம் பேசினார். ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஆறுமுகம், பாலசுப்பிரமணி, சரவணன், தங்கவேல், சண்முகம், தம்பிமுத்து பங்கேற்றனர்.

