ADDED : ஏப் 12, 2026 09:03 PM
அ நிறம் | அளவு
வடமதுரை:தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நாளை (ஏப்.,14) செங்கோட்டை மயிலாடுதுறை முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரயில் வழக்கமான நேர் பாதையில் திண்டுக்கல், வடமதுரை வழியே இயக்கப்படுகிறது.
கடந்த 6 மாதங்களுக்கு மேலாக மதுரை, திண்டுக்கல் ரயில் பாதையில் பகல் நேரத்தில் நடக்கும் பராமரிப்பு பணியால் புதன்கிழமை தவிர மற்ற நாட்களில் மானாமதுரை, காரைக்குடி வழியே சுற்றுப்பாதையில் இந்த ரயில் செல்கிறது.
நாளை(ஏப்.,14) தமிழ் புத்தாண்டு தினம் என்பதால் பராமரிப்பு பணி நிறுத்தப்பட்டு வழக்கமான நேர் பாதையிலேயே இந்த ரயில் செல்லும் வகையில் ரயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
இதுபோல் குருவாயூர் சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலும் வழக்கமான நேர் பாதையில் மதுரை, திண்டுக்கல் வழியே சென்னைக்கு இயக்கப்டும்.
