ADDED : ஆக 17, 2026 08:32 PM
அ நிறம் | அளவு
பழநி: பழநி மயில் ரவுண்டான அருகே மா.கம்யூ., சார்பில், நில மோசடியில் ஈடுபட்ட நில மாபியா நபர்களை கைது செய்ய கோரிக்கை விடுத்து நேற்று மாலை 6:00 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஒன்றியச் செயலாளர் ஈஸ்வரன் தலைமை வகித்தார். நிகழ்வில், ‘தண்டபாணி சுவாமி மடத்தின் நிலம், தம்புரான் தோட்டம், ஆயக்குடி, கன்னிகா பரமேஸ்வரி கோயில் நிலம், கவுமாரமடத்தின் நிலம் உள்ளிட்ட இடங்களை கையகப்படுத்த முயற்சி செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் நகர்குழு உறுப்பினர் மனோகரன், மாவட்டச் செயலாளர் பிரபாகரன், நகரச் செயலாளர் கந்தசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.
