/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அ.தி.மு.க., சார்பில் மருத்துவ முகாம்
/
அ.தி.மு.க., சார்பில் மருத்துவ முகாம்
ADDED : நவ 17, 2025 02:30 AM

வடமதுரை: வேடசந்துாரில் அ.தி.மு.க., சார்பில் மருத்துவ முகாம் நடந்தது.
வேடசந்துார் தொகுதி அ.தி.மு.க., சார்பில் முன்னாள் துணை சபாநாயகர் வி.பி.பாலசுப்பிரமணியின் நினைவு மருத்துவமனை, வி.பி.பி.நினைவு அறக்கட்டளை, வராஹி கிட்னி சென்டர் இணைந்து சிறுநீரகம் சார்ந்த நோய்களுக்கான இலவச மருத்துவ முகாம் வடமதுரையில் நடத்தினர். இளைஞர், இளம்பெண்கள் பாசறை மாநில செயலாளர் வி.பி.பி., பரமசிவம் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் சீனிவாசன் துவக்கி வைத்தார். அமைப்பு செயலாளர் மருதராஜ், மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் தென்னம்பட்டி பழனிச்சாமி, விவசாய பிரிவு செயலாளர் ராஜமோகன், ஒன்றிய செயலாளர்கள் லட்சுமணன், தண்டாயுதம், ஜான்போஸ், பழனியம்மாள், மலர்வண்ணன், பெருமாள், நகர செயலாளர்கள் பாலசுப்பிரமணி, ராகுல்பாபா, பாபுசேட், அறிவாளி பங்கேற்றனர்.

