UPDATED : மே 08, 2026 06:50 PM
ADDED : மே 08, 2026 06:43 PM
அ நிறம் | அளவு
ஒட்டன்சத்திரம்:உலக செஞ்சிலுவை தினத்தை முன்னிட்டு ஒட்டன்சத்திரத்தில் இலவச சர்க்கரை நோய், ரத்த கொதிப்பு நோய் கண்டுபிடிப்பு ,மருத்துவ ஆலோசனை முகாம் நடந்தது.
திண்டுக்கல் மாவட்ட இந்தியன் செஞ்சிலுவை சங்க செயற்குழு உறுப்பினர் ஹெரால்ட் ஜாக்சன், ஆயுட்கால உறுப்பினர் வேலுச்சாமி, ஒட்டன்சத்திரம் அண்ணா சுமை தூக்குவோர் சங்கத் தலைவர் சுப்பிரமணி முன்னிலை வகித்தனர். வட்ட அரசு மருத்துவமனை முன்னாள் தலைமை மருத்துவர் ஆசைத்தம்பி ஆலோசனை வழங்கினார்.
