UPDATED : மே 26, 2026 05:28 PM
ADDED : மே 26, 2026 05:21 PM
அ நிறம் | அளவு
வடமதுரை:பாடியூர் புதுப்பட்டி அருகே நாட்டாண்மைகாரன்பட்டி வீருதும்மம்மன் மாலைக் கோயிலில் திண்டுக்கல் அரசன் ரியல் எஸ்டேட், மதுரை அரவிந்த கண் மருத்துவமனை, ஒக்கலிகர் தசரிவார் குல பங்காளிகள் இணைந்து கண் மருத்துவ முகாம் நடத்தின.
வேடசந்துார் எம்.எல்.ஏ., வீரா சாமிநாதன் துவக்கி வைத்தார். அரசன் ரியல் எஸ்டேட் நிர்வாக இயக்குனர் சண்முகம் முன்னிலை வகித்தார். கோயில் கவுரவ தலைவர் தாந்தோன்றிசாமி, பொருளாளர் முருகபாண்டி, நிர்வாகிகள் சக்திவேல், நாகராஜ், சுப்பிரமணி, பூஜாரி தொட்டைய கவுடர், முகாம் அமைப்பாளர் விவேகானந்தன் பங்கேற்றனர்.
