UPDATED : ஆக 08, 2026 08:43 PM
ADDED : ஆக 08, 2026 08:00 PM
அ நிறம் | அளவு
செம்பட்டி:காந்திகிராம பல்கலை வாழ்நாள் கற்றல் விரிவாக்கத்துறை, திண்டுக்கல் வாசன் கண் மருத்துவமனை சார்பில் மைக்கேல்பாளையத்தில் கண் மருத்துவ முகாம் நடந்தது. பேராசிரியர் வெங்கடரவி தலைமை வகித்தார். மானிட சேவை மைய செயலாளர் பிரிட்டோ செல்வராஜ், பாதிரியார் வின்சென்ட்ராஜா முன்னிலை வகித்தனர்.
ஏராளமான பயனாளிகளுக்கு இலவச கண் பரிசோதனை, பார்வைத் திறன் மதிப்பீடு, மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன. செம்பட்டி செயின்ட் பிரிட்டோ அகாடமி, மானிட சேவை மையம் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
-
