ADDED : ஆக 30, 2026 07:33 PM
அ நிறம் | அளவு
வடமதுரை: அய்யலுாரில் ஒன்றிய காங்., கமிட்டி, மாவட்ட பார்வையிழப்பு தடுப்புச் சங்கம் இணைந்து கண் மருத்துவ முகாம் நடந்தது.
மாவட்டத் தலைவர் சாமிநாதன் துவக்கி வைத்தார். திண்டுக்கல் அரவிந்த் கண் மருத்துவமனை முகாம் ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் தலைமையிலான குழுவினர் பரிசோதனை நடத்தினர். காங்., மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் ரங்கமலை, ஒன்றியத் தலைவர் பாலமுருகன், நகரத் தலைவர் அண்ணாமலை பங்கேற்றனர்.
