ADDED : மார் 13, 2026 06:45 AM
அ நிறம் | அளவு
திண்டுக்கல் :: மாத ஊக்கத்தொகை ரூ.15 ஆயிரமாக உயர்த்தி வழங்கவேண்டும், துறை சார்ந்த செலவுகளை அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும், இ.எஸ்.ஐ., பி.எப்., மகப்பேறு கால சலுகை வழங்கவேண்டும் உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மக்களைத் தேடி மருத்துவ ஊழியர் சங்கத்தினர் மாநிலம் முழுவதும் அந்தந்த மாவட்டங்களில் சுகாதார அலுவலகங்களில் காத்திருப்பு போராட்டம் துவங்கி உள்ளனர்.
திண்டுக்கல்லில் பழநி ரோட்டில் உள்ள மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகத்தில் சி.ஐ.டி.யு. மாவட்ட துணை செயலாளர் வளர்மதி தலைமையில் போராட்டம் நடந்தது.
