ADDED : ஜூலை 22, 2025 04:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாண்டிக்குடி: தாண்டிக்குடி பண்ணைக்காடு ரோட்டில் வளர்ந்துள்ள செந்தட்டி செடிகளால் வாகன ஒட்டிகள் அரிப்பு ஏற்பட்டு அவதிப்படுகின்றனர்.
கொடைக்கானல் நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கடுகுதடி வனப்பகுதி ரோட்டின் இருபுறம் செந்தட்டி செடிகள் அடர்த்தியாக வளர்ந்துள்ளன.
குறுகிய ஒரு வழிப்பாதையில் எதிரே வரும் வாகனங்களுக்கு ஒதுங்கும் போது இவ்வாறான அரிப்பு செடி உரசி பயணிகள் உடல் உபாதைக்கு ஆளாகின்றனர்.
இதில் டூவிலரின் செல்பவரின் நிலை பரிதாபம். சாலைப்பணியாளர்களும் செடிகளை அகற்றுவதில் மெத்தனம் காட்டுகின்றனர்.
மாவட்ட நிர்வாகம் பயணிகளை அச்சுறுத்தும் அரிப்பு செடியை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

