sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

செய்தி சில வரிகளில்...

/

செய்தி சில வரிகளில்...

செய்தி சில வரிகளில்...

செய்தி சில வரிகளில்...


ADDED : ஜன 06, 2024 06:24 AM

Google News

ADDED : ஜன 06, 2024 06:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராகு கால பூஜை

வடமதுரை: வடமதுரை மகா காளியம்மன் கோயிலில் துர்க்கையம்மனுக்கு ராகு கால பூஜை நடந்தது. பால், இளநீர், தயிர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட ஏழு வகை பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. பக்த ஆஞ்சநேயர் கோயில் அர்ச்சகர் நாராயணன் நடத்தி வைத்தார். சுற்றுப்பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.

கல்லுாரியில் கருத்தரங்கம்

திண்டுக்கல்: திண்டுக்கல் ஜி.டி.என்.கலை கல்லுாரியில் முதல்வர் பாலகுருசாமி தலைமையில் மாணவர்களுக்கான இலக்கிய கருத்தரங்கம் நடந்தது. தமிழ்துறை தலைவர் மகாலெட்சுமி வரவேற்றார். தாளாளர் ரெத்தினம், இயக்குனர் துரை ரெத்தினம், துணைத்தலைவர் நடராஜன், நீலன் அகாடமி நிறுவனர் மழுவேந்திரன் பேசினர். உதவி பேராசிரியர் செண்பகா நன்றி கூறினார். காட்சி படுத்துதல், சிந்தனை திறன், மேலைநாட்டு பணி அனுபவங்கள் பற்றி சிறப்பு பாடம் எடுக்கப்பட்டது.

கோயிலில் யாக பூஜை

பழநி: பழநி அடிவாரம் கிழக்கு கிரி வீதி அழகு நாச்சியம்மன் கோயில் தைப்பூச பாதயாத்திரை பக்தர்கள் வருகை முன்னிட்டு அவர்களின் பாதுகாப்பு , நலன் வேண்டி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. கும்ப கலசங்கள் வைத்து கணபதி பூஜை, வேத மந்திரங்கள் முழங்க திசா ஹோமம் பூஜை நடந்தது. கும்ப கலசங்களுக்கு தீபாராதனை நடைபெற்றது. யாகத்தில் வைக்கப்பட்ட கும்ப கலச புனித நீரில் அழகு நாச்சிஅம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. கந்த விலாஸ் செல்வகுமார்,நவீன்விஷ்ணு, நரேஷ்குமரன், கோயில் கண்காணிப்பாளர் ராஜா, முன்னாள் கண்காணிப்பாளர் முருகேசன் கலந்து கொண்டனர்.

பள்ளி மேலாண்மை கூட்டம்

சாணார்பட்டி:கணவாய்ப்பட்டி ஊராட்சி அரசு நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில், பள்ளி தலைமை ஆசிரியர் பிரிட்டோ லீனஸ் ராஜ் முன்னிலையில் நடைபெற்றது. கணவாய்ப்பட்டி ஊராட்சி தலைவர் நிஷா ராமகிருஷ்ணன் பள்ளி வளர்ச்சி சம்பந்தமாக விவாதிக்க தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. வட்டார கருத்தாளர் வின்சென்ட் சகாயராஜ் , ஆசிரியர் பயிற்றுனர் கணேசன், இல்லம் தேடி மேற்பார்வையாளர் மாறவர்மன், குழு துணை த்தலைவர் பிரகலாதா கலந்து கொண்டனர்.

துர்க்கை கோயிலில் திசா பூஜை

பழநி : பழநி வடக்கு கிரி வீதி வீர துர்க்கை அம்மன் கோயிலில் உலக நலன் வேண்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. கும்ப கலசங்கள் வைத்து கணபதி ஹோமம் ,சிறப்பு திசா யாகம் நடைபெற்றது. கலச நீர் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. உலக மக்களின் நலன் வேண்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.

சித்தநாதன் அன்ட் சன்ஸ், பழனிவேல், கார்த்திகேயன் வள்ளுவர் தியேட்டர் உரிமையாளர் செந்தில்குமார் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us