ADDED : பிப் 15, 2026 05:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் ஏ.வெள்ளோட்டில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., சிலையை முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள், அன்னதானம் வழங்கினார்.
மாநில அம்மா பேரவை இணை செயலாளர் கண்ணன் முன்னிலை வகித்தார். கிழக்கு ஒன்றிய செயலாளர் முருகன் வரவேற்றார். மாநில பொதுக்குழு உறுப்பினர் நெப்போலியன், ஒன்றிய அவைத் தலைவர் இளங்கோ, பொருளாளர் மகாராஜன், மாவட்ட பிரதிநிதி முருகராஜ் மாவட்ட தொழிற்சங்க செயலாளர் முத்தையா, அம்மா பேரவை செயலாளர் நாகராஜ், மாணவர் அணி இணைச் செயலாளர் அழகுமணிகண்டன், இளைஞர் அணி செயலாளர் ரமேஸ், மகளிர் அணி தலைவர் ஷாலினி ஆல்பட் கலந்துக் கொண்டனர்.

