ADDED : ஆக 27, 2026 01:14 AM
அ நிறம் | அளவு
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் துல்கர்ணை சிக்கந்தர் நகர் அல்அமானத்துல் ஹிகம் மதரஸா சார்பில் 1501வது மிலாது நபி ஊர்வலம் நடந்தது. மதரஸா முதல்வர் ஹாஜி அமானுல்லாஹ் தலைமை வகித்தார்.
மவுலவி அன்வர் அலி சிராஜ் ஹசரத் பிரார்த்தனை செய்தார். ஊர்வலத்தை இன்ஸ்பெக்டர் லிங்கபாண்டியன் துவக்கி வைத்தார். எஸ்.ஐ., பூவரசன் முன்னிலை வகித்தார். ஊர்வலத்தில் நபிகளின் வரலாற்று பாடல்கள் பாடப்பட்டு, போதை ஒழிப்பு விழிப்புணர்வு கோஷம் எழுப்பப்பட்டது. முஸ்லிம் ஜமாத்தார்கள், மதரஸாவின் மாணவ, மாணவிகள், பெற்றோர், பொதுமக்கள் பங்கேற்றனர்.
