நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: அயோத்தியில் நடக்கும் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பா.ஜ., ஒன்றியம் சார்பில் 200க்கு மேற்பட்ட மகளிர் பால்குடம் ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.
தொடர்ந்து இவர்கள் முள்ளிபாடி ஆஞ்சநேயர் கோயிலில் அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினர். திண்டுக்கல் பா.ஜ., சட்டசபை அமைப்பாளர் கார்த்திக் வினோத், இளைஞரணி முன்னாள் மாவட்ட தலைவர் தமிழ்வாணன், கூட்டுறவு பிரிவின் மாவட்ட தலைவர் மோகன் பாண்டி, ஒன்றிய பொது செயலாளர் பொன்ராமன், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் சதீஷ்குமார், ஒன்றிய செயலாளர் திருப்பதி பங்கேற்றனர்.