தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்

பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்

பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்


UPDATED : ஆக 06, 2026 05:42 PM

ADDED : ஆக 06, 2026 05:40 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 06, 2026 05:42 PM ADDED : ஆக 06, 2026 05:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

குஜிலியம்பாறை;பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கக் கோரி கே.ஆனைபட்டியில் பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கருங்கல் ஊராட்சி கே.ஆனைபட்டியில் ஆவின் கூட்டுறவு பால் சொசைட்டி செயல்பட்டு வருகிறது. இங்கு பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து பசும்பால் லிட்டர் ரூ.32க்கும், எருமைப்பால் ரூ.55க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது.

கால்நடைகளுக்கான தீவன விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் கொள்முதல் விலையை உயர்த்தி பசும்பால் லிட்டருக்கு ரூ.45, எருமை பால் ரூ.60 வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆவின் கூட்டுறவு பால் சொசைட்டி முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பால் உற்பத்தியாளர்கள் சங்க முன்னாள் மாவட்ட தலைவர் ராஜரத்தினம் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய தலைவர் ஜெயபால், பால் உற்பத்தியாளர்கள் பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us