/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நான்கு வழி சாலையாக மாற்ற பூமி பூஜை; அமைச்சர் சக்கரபாணி துவக்கி வைத்தார்
/
நான்கு வழி சாலையாக மாற்ற பூமி பூஜை; அமைச்சர் சக்கரபாணி துவக்கி வைத்தார்
நான்கு வழி சாலையாக மாற்ற பூமி பூஜை; அமைச்சர் சக்கரபாணி துவக்கி வைத்தார்
நான்கு வழி சாலையாக மாற்ற பூமி பூஜை; அமைச்சர் சக்கரபாணி துவக்கி வைத்தார்
ADDED : ஜன 25, 2025 05:39 AM

வேடசந்துார் :  வேடசந்துார் தொட்டனம்பட்டியில் இருந்து குளத்துார் லட்சுமணபுரம்  வரையிலான இரு வழி சாலையை  நான்கு வழி சாலையாக மாற்றும் பணியை  அமைச்சர் சக்கரபாணி  துவக்கி வைத்தார்.
குஜிலியம்பாறை கரூர் வழித்தடத்தில் தொட்டனம்பட்டியில் இருந்து கரூர் மாவட்ட எல்லை வரை இருந்த இரு வழி சாலையை  நான்கு வழி சாலையாக   மாற்றப்பட்ட நிலையில் தொட்டனம்பட்டியில் இருந்து  திண்டுக்கல் வரை ரோடு அகலப்படுத்தாமல் இருந்தது. இந்நிலையில்  தொட்டனம்பட்டியில் இருந்து  குளத்துார் லட்சுமணபுரம் வரை 4.6 கி.மீ., துாரம் இருவழி சாலையை   ரூ. 16.90 கோடி  மதிப்பில் நான்கு வழி சாலையாக மாற்றும் பணி பூமி பூஜையுடன் நேற்று துவங்கியது.
இதற்காக விழாவிற்கு  எம்.எல்.ஏ., காந்திராஜன் தலைமை வகித்தார்.  உணவுப்பொருள் வழங்கல் துறை  அமைச்சர் சக்கரபாணி  பணிகளை துவக்கி வைத்தார். அப்போது அமைச்சர்  பேசியதாவது :    விடுபட்ட மகளிர் அனைவருக்கும் கலைஞர் உரிமைத்தொகை விரைவில் வழங்கப்படும் .
இதுவரை 17 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு  புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டு உள்ளது. ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்கப்பட்டு வருகிறது என்றார்.
ஒன்றிய செயலாளர்கள்  கவிதா,    சுப்பையன், பாண்டி, பேரூர் செயலாளர்கள்  கார்த்திகேயன்,  செந்தில்குமார்,  கணேசன்,  கருப்பன்,  கதிரவன்,  பழனிச்சாமி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரவிசங்கர், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் சவுடீஸ்வரி  ,கார்த்திகேயன், பாண்டியன், மருதபிள்ளை, கவிதாமுருகன், பூபதிமாரிமுத்து, கதிரவன், சவுந்தர், மணிமாறன், பாஸ்கரன், ஆரோன், சீரங்கம்  பங்கேற்றனர்.

