/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
முன்னோடி மாநிலமாக தமிழகம் அமைச்சர் சக்கரபாணி பெருமிதம்
/
முன்னோடி மாநிலமாக தமிழகம் அமைச்சர் சக்கரபாணி பெருமிதம்
முன்னோடி மாநிலமாக தமிழகம் அமைச்சர் சக்கரபாணி பெருமிதம்
முன்னோடி மாநிலமாக தமிழகம் அமைச்சர் சக்கரபாணி பெருமிதம்
ADDED : நவ 21, 2025 05:34 AM

திண்டுக்கல்: ''அனைத்து துறைகளிலும் இந்தியாவிலே முன்னோடி மாநிலமாக தமிழகம் சிறந்து விளங்குகிறது '' என அமைச்சர் சக்கரபாணி பேசினார்.
திண்டுக்கல் பி.வி.கே., மஹாலில் நடந்த கூட்டுறவு வார விழாவில் 4506 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அவர் பேசியதாவது:
மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களில் பயிர்க்கடன் பெற்ற விவசாயிகள் 45,145 பேருக்கு ரூ.525.90 கோடி கடன் தள்ளுபடி செய்யப் பட்டுள்ளது.
தமிழக முதல்வர் ஒரு நெல்மணி கூட மழையில் நனைய கூடாது என வலியுறுத்தினார்.
இதற்காக 8 லட்சம் மெட்ரிக் டன் கோடவுன்கள் கட்டப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் 376 அரிசி ஆலைகள் இருந்து வந்த நிலையில் தற்போது 700 அரிசி ஆலைகள் செயல்படுகின்றன.
திண்டுக்கல் மாவட்டத்தில் 239 ரேஷன் கடைகள் ஐ.எஸ்.ஓ., சான்றிதழ் பெற்றுள்ளது.
2023- -24 ல் தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் 4000 இடங்களில் நேரடி கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு நெல்கள் கொள்முதல் செய்யப்பட்டது.
தி.மு.க., அரசு பொறுப்பு ஏற்றது முதல் கூட்டுறவுத்துறை மட்டுமல்ல அனைத்து துறைகளிலும் இந்தியாவிலே முன்னோடி மாநிலமாக தமிழகம் சிறந்து விளங்குகிறது என்றார்.
சச்சதானந்தம் எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் செந்தில்குமார், காந்திராஜன், டி.ஆர்.ஓ., ஜெயபாரதி, மேயர் இளமதி, துணைமேயர் ராஜப்பா, கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர் ராகவ் பாலாஜி, மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் சுபாஷினி கலந்து கொண்டனர்.

