/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
65 ஆயிரம் புதிய ரேஷன் கார்டுகள் அமைச்சர் சக்கரபாணி தகவல்
/
65 ஆயிரம் புதிய ரேஷன் கார்டுகள் அமைச்சர் சக்கரபாணி தகவல்
65 ஆயிரம் புதிய ரேஷன் கார்டுகள் அமைச்சர் சக்கரபாணி தகவல்
65 ஆயிரம் புதிய ரேஷன் கார்டுகள் அமைச்சர் சக்கரபாணி தகவல்
ADDED : ஜூலை 26, 2025 04:09 AM

ஒட்டன்சத்திரம்: ''திண்டுக்கல் மாவட்டத்தில் 65 ஆயிரம் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளதாக'' அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
அம்பிளிக்கை சாந்தி நிகேதன மேல்நிலைப் பள்ளியில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாமில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்ற அவர் பேசியதாவது:தமிழகத்தில் இதுவரை 20 லட்சம் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது.திண்டுக்கல் மாவட்டத்தில் 65 ஆயிரம் ரேஷன் கார்டுகள் வழங்கப் பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 300 , ஒட்டன்சத்திரம் தொகுதியில் 100 கடைகள் பிரிக்கப்பட்டுள்ளன .
இந்தியாவிலே தமிழ்நாட்டில் தான் அதிக அளவு மாணவர்கள் உயர் கல்வி படிக்கின்றனர் என்றார்.
உதவி திட்ட அலுவலர் பிரபாகரன், தாசில்தார் சஞ்சய் காந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் காமராஜ், பிரபு பாண்டியன், வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத் தலைவர் ராஜாமணி, தி.மு.க., ஒன்றிய செயலாளர் ஜோதீஸ்வரன், பாலு, துணைச் செயலாளர்கள் முருகானந்தம், சிவபாக்கியம் ராமசாமி கலந்து கொண்டனர்.

