நிறைவேற்றிய திட்டப்பணிகளை கூறி ஓட்டு சேகரித்த அமைச்சர் சக்கரபாணி
நிறைவேற்றிய திட்டப்பணிகளை கூறி ஓட்டு சேகரித்த அமைச்சர் சக்கரபாணி
ADDED : ஏப் 07, 2026 10:48 PM

ஒட்டன்சத்திரம்:ஒட்டன்சத்திரம் தொகுதியில் நிறைவேற்றப்பட்ட திட்டப்பணிகளை சுட்டிக்காட்டி தொகுதியின் தி.மு.க.,வேட்பாளரான அமைச்சர் சக்கரபாணி ஓட்டு சேகரித்தார்.
ஒட்டன்சத்திரம் தொகுதி மேல்கரைப்பட்டி, கோட்டத்துறை, ராஜாம்பட்டி, முத்து நாயக்கன்பட்டி, மிடாப்பாடி, புஷ்பத்துார், தாழையூத்து, மானுார், அக்கரைப்பட்டி, கோவிலம்மாபட்டி, கோரிக்கடவு , கொழுமங்கொண்டான் ஊராட்சி கிராமங்களில் உதயசூரியன் சின்னத்திற்கு ஓட்டு சேகரித்த அமைச்சர் அரசக்கரபாணி பேசியதாவது:
தொகுதியில் மக்களின் பயன்பாட்டிற்காக புதிய சமுதாயக்கூடங்கள், குழந்தைகளுக்கான அங்கன்வாடி மையங்கள் ,அறிவுத்திறனை வளர்க்கும் நுாலகங்கள், கிராமங்களை இணைக்கும் இணைப்பு சாலை , பாதுகாப்பான பயணத்திற்கு பேவர் பிளாக் நடைபாதைகள் ,விவசாயம் ,தண்ணீர் தேவை பூர்த்தி செய்ய அமைக்கப்பட்ட கிணறுகள்,அனைத்து உயிர்களுக்கும் வழங்கப்பட்ட பாதுகாப்பான குடிநீர் இணைப்புகள் உள்ளிட்ட பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. மீண்டும் தி.மு.க., ஆட்சி அமைந்தவுடன் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். குறிப்பாக கல்லுாரி மாணவர்களின் உயர்கல்வி,வேலை வாய்ப்பினை ஊக்குவிக்கும் விதமாக 35 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும். பெண்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கான கடனுதவி ரூ. 5 லட்சம் வரை உயர்த்தி வழங்கப்படும் என்றார் .
