/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தினசரி 18 லட்சம் லிட்டர் குடிநீர் அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்
/
தினசரி 18 லட்சம் லிட்டர் குடிநீர் அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்
தினசரி 18 லட்சம் லிட்டர் குடிநீர் அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்
தினசரி 18 லட்சம் லிட்டர் குடிநீர் அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்
ADDED : அக் 13, 2025 05:51 AM

கன்னிவாடி: 'ரெட்டியார்சத்திரம் தேவர் மலையில் 100 கோடி ரூபாய் மதிப்பிலான காவிரி கூட்டு குடிநீர் தொட்டியில் இருந்து ஒன்றிய பகுதிகளுக்கு தினமும் 18 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகிக்கப்பட உள்ளதாக,'' அமைச்சர் ஐ.பெரியசாமி பேசினார்.
ரெட்டியார்சத்திரம் கரிசல்பட்டியில் நடந்த கிராமசபை கூட்டத்தில் அவர் பேசியதாவது: அ.தி.மு.க., ஆட்சியில் நிறுத்தப்பட்டு 10 ஆண்டுகளாக உதவித்தொகை பெறாமல் தவித்த முதியோர் உதவி தொகை தி.மு.க., ஆட்சியில் வழங்கப்பட்டு வருகிறது. ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் மலைக்கிராமங்கள் நீங்கலாக 22 ஊராட்சிகளில் 198 மேல்நிலைத் தண்ணீர் தொட்டிகள் கட்டப்பட்டு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ரெட்டியார்சத்திரம் தேவர் மலையில் 100 கோடி ரூபாய் மதிப்பில் காவிரி கூட்டு குடிநீர் தொட்டி கட்டப்பட்டு தினசரி 18 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகிக்கப்பட உள்ளது என்றார்.
திட்ட இயக்குனர் திலகவதி தலைமை வகித்தார். ஆர்.டி.ஓ., திருமலை, தி.மு.க., கிழக்கு மாவட்ட பொருளாளர் சத்தியமூர்த்தி, பி.டி.ஓ.,க்கள் மலரவன், கண்ணன் முன்னிலை வகித்தனர்.