/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சிரமமின்றி அரசு சலுகைகள் அமைச்சர் ஐ.பெரியசாமி பெருமிதம்
/
சிரமமின்றி அரசு சலுகைகள் அமைச்சர் ஐ.பெரியசாமி பெருமிதம்
சிரமமின்றி அரசு சலுகைகள் அமைச்சர் ஐ.பெரியசாமி பெருமிதம்
சிரமமின்றி அரசு சலுகைகள் அமைச்சர் ஐ.பெரியசாமி பெருமிதம்
ADDED : ஜூலை 31, 2025 06:14 AM

கன்னிவாடி : ''இந்தியாவிலேயே மக்களுக்கு அரசு சலுகைகளை கொண்டு சேர்க்கும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது'' என அமைச்சர் ஐ.பெரியசாமி பேசினார் .
திருமலைராயபுரத்தில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் முகாமை துவக்கி வைத்து அவர் பேசியதாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் 4 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு உள்ளது. விடுபட்டவர்களுக்கு இது போன்ற முகாம்களில் மனுக்கள் பெறப்படுகிறது.
முகாம்களில் பெறப்படும் ஒவ்வொரு மனுவும் முதல்வரின் பார்வைக்கு சென்று வருவதால் தமிழக முதல்வரே நேரில் வந்து மனுக்களை பெறுவது போல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே சிரமமின்றி மக்களுக்கு அரசு சலுகைகள் வழங்கும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என்றார். ஆர்.டி.ஓ., சக்திவேல் தலைமை வகித்தார். பேரூராட்சிகள் உதவி இயக்குனர் ராஜா, ஸ்ரீராமபுபரம் பேரூராட்சி தலைவர் சகிலா, துணைத்தலைவர் முருகேசன் முன்னிலை வகித்தனர். செயல் அலுவலர் கல்பனா வரவேற்றார்.

