/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கொடுத்த வாக்கை நிறைவேற்றுவோம் அமைச்சர் ஐ.பெரியசாமி பேச்சு
/
கொடுத்த வாக்கை நிறைவேற்றுவோம் அமைச்சர் ஐ.பெரியசாமி பேச்சு
கொடுத்த வாக்கை நிறைவேற்றுவோம் அமைச்சர் ஐ.பெரியசாமி பேச்சு
கொடுத்த வாக்கை நிறைவேற்றுவோம் அமைச்சர் ஐ.பெரியசாமி பேச்சு
ADDED : டிச 30, 2025 07:08 AM

சின்னாளபட்டி: கொடுத்த வாக்கை நிறைவேற்றாமல் இருக்க மாட்டோம் என அமைச்சர் ஐ.பெரியசாமி பேசினார்.
சின்னாளபட்டியில் பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கல் விழாவில் பயனாளிகளுக்கு உதவிகளை வழங்கிய அவர் பேசியதாவது:
தி.மு.க., ஆட்சியில் கருணாநிதி முதல்வராக இருந்தபோது ஆத்துார் தொகுதியில் நுாற்றுக்கணக்கானோருக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களை வழங்கினோம்.
முருகன்பட்டியில் நுாற்றுக்கணக்கான பயனாளிகளுக்கு இலவச பட்டாக்களுடன் வீடுகள் கட்டிக் கொடுக்கப் பட்டது.
சத்யா நகர் பகுதி மக்களுக்கு இலவச பட்டாக்கள் கொடுத்ததால் இன்று அதே இடத்தில் பல அடுக்கு மாடி வீடுகள் உருவாகி உள்ளன.
ஆக்கிரமிப்புகளை அகற்றுகிறோம் என கூறி வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளை இடிக்க வந்த போது அவற்றிற்கு பட்டாக்கள் வழங்கி அவற்றை காப்பாற்றியது தி.மு.க., அரசு மட்டுமே என்றார்.
டி.ஆர்.ஓ., ஜெயபாரதி தலைமை வகித்தார்.
பேரூராட்சி தலைவர் பிரதீபா, துணை தலைவர் ஆனந்தி, செயல் அலு வலர் இளவரசி முன்னிலை வகித்தனர்.

