/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தர்மத்துப்பட்டியில் வேளாண் கல்லுாரி அமைச்சர் பெரியசாமி தகவல்
/
தர்மத்துப்பட்டியில் வேளாண் கல்லுாரி அமைச்சர் பெரியசாமி தகவல்
தர்மத்துப்பட்டியில் வேளாண் கல்லுாரி அமைச்சர் பெரியசாமி தகவல்
தர்மத்துப்பட்டியில் வேளாண் கல்லுாரி அமைச்சர் பெரியசாமி தகவல்
ADDED : ஆக 16, 2025 02:45 AM
ரெட்டியார்சத்திரம்: தர்மத்துப்பட்டியில் விரைவில் வேளாண் கல்லுாரி அமைய உள்ளதாக,'' அமைச்சர் ஐ.பெரியசாமி பேசினார்.
காமாட்சிபுரம் அருகே ராமலிங்கம்பட்டியில் புதிய ரேஷன் கடை கட்டடத்தை திறந்து வைத்த அவர் பேசியதாவது :
இந்தியாவில் ரேஷன் கடைகள் மூலம் அரிசி, பருப்பு, சீனி உட்பட அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்கும் மாநிலமாக தமிழகம் உள்ளது. ஆத்துார் தொகுதியில் கிராம மாணவர்கள் சிரமமின்றி உயர் கல்வி கற்கும் நிலை உருவாகி உள்ளது. ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் விவசாயிகள் நிறைந்த பகுதியாக உள்ளதால் தர்மத்துப்பட்டியில் விரைவில் வேளாண் கல்லுாரி அமைய உள்ளது. அதற்கான ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.
ஆர்.டி.ஓ., சக்திவேல் தலைமை வகித்தார். கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் குருமூர்த்தி, தாசில்தார் ஜெயபிரகாஷ், பி.டி.ஓ.,க்கள் மலரவன், கண்ணன் பங்கேற்றனர்.