/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தேவைப்படும் இடங்களில் சர்வீஸ் ரோடுகள் மிஸ்ஸிங்... ; பல ஆண்டுகளாக சிரமப்படும் வாகன ஓட்டிகள்
/
தேவைப்படும் இடங்களில் சர்வீஸ் ரோடுகள் மிஸ்ஸிங்... ; பல ஆண்டுகளாக சிரமப்படும் வாகன ஓட்டிகள்
தேவைப்படும் இடங்களில் சர்வீஸ் ரோடுகள் மிஸ்ஸிங்... ; பல ஆண்டுகளாக சிரமப்படும் வாகன ஓட்டிகள்
தேவைப்படும் இடங்களில் சர்வீஸ் ரோடுகள் மிஸ்ஸிங்... ; பல ஆண்டுகளாக சிரமப்படும் வாகன ஓட்டிகள்
ADDED : நவ 16, 2025 03:49 AM

மாவட்டத்தில் புதிதாக போடப்படும் பைபாஸ் ரோடுகள் மற்றும் ஏற்கனவே உள்ள பைபாஸ் ரோடுகளில் முக்கிய சந்திப்புகளில் சர்வீஸ் ரோடுகள் போட தாமதமாவதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். குறிப்பாக, லெக்கையன்கோட்டையிலிருந்து அத்திக்கோம்பை, காளாஞ்சிபட்டி, கொல்லபட்டி, குறிஞ்சி நகர் வழியாக பைபாஸ் ரோடு செல்கிறது. இந்த ரோடு முறையான திட்ட மிடுதலுடன் அமைக்கப்படாததால் பல கிராமங்களுக்கு செல்வதற்கு நேரடி பாதை இல்லாமல் உள்ளது. பல கிலோமீட்டர் சுற்றிச் செல்ல வேண்டுமென்பதால், ஒருவழிப்பாதையின் எதிரே பயணித்து ரோட்டை கடப்பதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது.
ஒட்டன்சத்திரம் - வேடசந்தூர் ரோட்டின் இடையே பைபாஸ் ரோடு குறுக்கிடுகிறது. இந்த ரோட்டின் சந்திப்பில் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. மேம்பாலத்தின் வடக்கு பகுதியில் இருந்து பைபாஸ் ரோட்டிற்கு செல்வதற்கு இன்னும் சர்வீஸ் ரோடு அமைக்கப்படவில்லை. இதனால் வேடசந்தூர் வழித்தடத்திலிருந்து திண்டுக்கல், மதுரை செல்ல வேண்டிய வாகனங்கள் மேம்பாலத்தின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு வழி பாதையில் பயணித்து டிவைடரை கடந்து இடது புறம் செல்கின்றன.
இதேபோல் திண்டுக்கல் - - கரூர் பைபாஸ் ரோட்டில் வேடசந்தூர் அருகே சர்வீஸ் ரோடு இல்லாததால் ஒட்டன்சத்திரம் வேடசந்தூர் வழித்தடத்திலிருந்து கரூர் மற்றும் திண்டுக்கல் செல்லும் வாகனங்கள் பல கி.மீ. சுற்றிக்கொண்டு வேடசந்தூர் நகரத்திற்குள் சென்று பயணிக்க வேண்டியுள்ளது.
இதனால் எரிபொருள் செலவு அதிகமாவதுடன் கால விரயமும் ஏற்படுகிறது. மேலும் வேடசந்தூர் நகருக்குள் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. அதிகாரிகளின் அலட்சிய போக்கால் பைபாஸ் ரோடு அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் சர்வீஸ் ரோடுகள் இல்லாததால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே, தேவையான இடங்களில் சர்வீஸ் ரோடுகள் அமைத்து விபத்துகளை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

