UPDATED : ஜூலை 28, 2026 03:32 PM
ADDED : ஜூலை 28, 2026 01:20 PM
அ நிறம் | அளவு
ஒட்டன்சத்திரம்:ஒட்டன்சத்திரம் ஒன்றிய பகுதியில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகளை எம்.எல்.ஏ., சக்கரபாணி ஆய்வு செய்தார். அதன்படி கேதையுறும்பு ஊராட்சியில் விளையாட்டு மைதானம் கட்டுமான பணி, ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் கூரை அமைக்கும் பணி, குழந்தை வேலப்பர் கோயில் கிரிவலப்பாதை அருகே அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணியை எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார்.
நகராட்சி தலைவர் திருமலைசாமி, துணைத்தலைவர் வெள்ளைச்சாமி, கமிஷனர் ஸ்வேதா, பொறியாளர் சுப்பிரமணிய பிரபு, கவுன்சிலர் கண்ணன் உடன் இருந்தனர்.
