UPDATED : ஏப் 29, 2026 09:55 PM
ADDED : ஏப் 29, 2026 08:42 PM
அ நிறம் | அளவு
கொடைக்கானல்:கொடைக்கானலில் ஏப்ரல் 29 ஆம் தேதி அரை மணி நேரம் மிதமான மழை பெய்தது.
வெளுத்து வாங்கும் கோடை வெயிலால் குளு குளு நகரான கொடைக்கானல் புழுக்கம் அடைந்தது. வழக்கத்திற்கு மாறான வெயிலால் நகரில் மின்விசிறி பயன்பாடு அதிகரித்தது.
இரு தினங்களாக வெயிலின் தாக்கம் சற்று தணிந்து இதமான சூழல் நிலவியது. நேற்று மதியம் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் 3:00 மணிக்கு மிதமான மழை பெய்தது. சுட்டெரிக்கும் கோடை வெயிலுக்கு இடையே மழை பெய்ததால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
