UPDATED : நவ 05, 2026 11:37 PM
ADDED : நவ 05, 2026 07:20 PM

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், தாண்டிக்குடி மலைப்பகுதியில் அரை மணி நேரம் மிதமான மழை பெய்தது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இரு வாரங்களுக்கு முன் கொடைக்கானல், தாண்டிக்குடி மலைப்பகுதியில் கனமழை பெய்தது.
இன்று (நவ.,5) காலை வெயில் பளிச்சிட்ட நிலையில் மதியத்திற்கு பின் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு அரை மணி நேரம் மிதமான மழை பெய்தது. காற்றில் ஈரப்பதம் அதிகரித்து குளிர் நிலவியது. செண்பகனுார் பகுதியில் பாலத்தில் அடைப்பு ஏற்பட்டு மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. நெடுஞ்சாலைத்துறையினர் அடைப்பை சீர் செய்தனர்.
தற்போதைய மழையானது கீழ்மலை பகுதியில் காபி, ஏலக்காய், அவகோடா உள்ளிட்ட மலைத்தோட்டப் பயிர்களுக்கு ஏற்றதாக அமைந்தது.
