ADDED : நவ 25, 2026 08:53 PM

அ நிறம் | அளவு
கொடைக்கானல்: கொடைக்கானல், தாண்டிக்குடி மலைப்பகுதியில் இன்று (நவ.,25) இடைவிடாது பெய்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. கொடைக்கானல், தாண்டிக்குடியில் இன்று காலை முதல் இடைவிடாது மிதமான மழை பெய்தது. இதனால் சுற்றுலா பயணிகள் விடுதிகளிலேயே முடங்கினர்.
நகரை பனிமூட்டம் சூழ்ந்ததால் வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டு சென்றன. காற்றில் ஈரப்பதம் அதிகரித்து குளிர் நிலவியது. மாலையில் மழை ஓய்ந்தபின் ரம்யமான சூழலில் பயணிகள் படகு சவாரி செய்தனர். முக்கிய சுற்றுலா தலங்கள் வெறிச்சோடின. கொடைக்கானலில் அதிகபட்சமாக 39 மி.மீ., மழை பதிவானது.
