ADDED : ஏப் 03, 2026 10:06 PM

அ நிறம் | அளவு
கொடைக்கானல்:கொடைக்கானல் மலைப்பகுதியில் வழக்கத்திற்கு மாறாக வெளுத்து வாங்கும் வெயிலால் புழுக்கம் நீடிக்கிறது. இதனால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
காலை வெயில் பளிச்சிட்ட நிலையில் மதியம் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு அரை மணி நேரம் மிதமான மழை பெய்தது. ஆங்காங்கே தரையிறங்கிய மேகக்கூட்டத்தால் ரம்யமான சீதோஷ்ண நிலை நீடித்தது. இதனை சுற்றுலா பயணிகள் அனுபவித்தனர்.
