ADDED : பிப் 07, 2026 06:01 AM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்: திண்டுக்கல் தொழிற்பேட்டை கடையில் திருடிய சிறார் உட்பட மூவரை மாநகர் வடக்கு போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் தொழிற்பேட்டையில் அதே பகுதி முத்துப்பாண்டி இரும்புப்பொருட்கள் தயாரிக்கும் கடை நடத்தி வந்தார்.சில நாட்களுக்கு முன் அக்கடையில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்தனர். பின்னர் கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.27,500ஐ திருடிச் சென்றனர்.
திண்டுக்கல் இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி தலைமையில் எஸ்.ஐ., பிரபாகரன், சிறப்பு எஸ்.ஐ., ஜார்ஜ்எட்வர்டு வழக்குப்பதிந்து விசாரித்தனர். விசாரணையில் திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த கார்த்திக் 22, வடமதுரையை சேர்ந்த பாண்டியராஜ் 28, 17 வயது சிறுவர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து மூவரையும் போலீசார் கைது செய்தனர்.
