ADDED : மே 14, 2026 05:23 AM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்: கொடைக்கானல் கீழ்மலை த.வெ.க., தெற்கு ஒன்றிய செயலாளர் ராம்குமார் தலைமையில் நிர்வாகிகள் கலால் துறை உதவி ஆணையர் பிரபுவிடம் அளித்த மனுவில் , பண்ணைக்காடு மூலையார் பகுதியில் டாஸ்மாக் கடை அருகே முருகன் கோயில், விவேகானந்தா பள்ளி, வள்ளக்குளம் சாய்பாபா கோயில் உள்ளன.
இந்த கடையில் மது குடித்து விட்டு தகராறில் ஈடுபடும் குடிமகன்களால் பொதுமக்கள், பெண்களுக்கு இடையூறு ஏற்படுகிறது.
பள்ளி மாணவிகள் அச்சத்துடன் செல்வது தொடர்கிறது. இந்த கடையை மூட வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
