ADDED : பிப் 21, 2026 07:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் மண்டல தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை சார்பில் அலுவலக கூட்டரங்கில் பொது மேலாளர் முத்துக்கிருஷ்ணன் தலைமையில் உலகத் தாய்மொழி நாள் உறுதிமொழி எடுத்துக் கொள்ளும் நிகழ்ச்சி நடந்தது.
பொது மேலாளர் உறுதி மொழியை வாசிக்க அனைத்து அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர். இதுபோல் திண்டுக்கல் மண்டலத்தில் உள்ள 16 பணிமனைகளில் கிளை மேலாளர்கள் உறுதி மொழி வாசிக்க அனைவரும் ஏற்றனர். வேளாண் இணை இயக்குனர் அலுவலகத்திலும் உறுதி மொழி எடுக்கப்பட்டது.

