sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், செப்டம்பர் 11, 2025 ,ஆவணி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

ரோடு பள்ளத்தால் தவியாய் தவிக்கும் வாகன ஓட்டிகள்

/

ரோடு பள்ளத்தால் தவியாய் தவிக்கும் வாகன ஓட்டிகள்

ரோடு பள்ளத்தால் தவியாய் தவிக்கும் வாகன ஓட்டிகள்

ரோடு பள்ளத்தால் தவியாய் தவிக்கும் வாகன ஓட்டிகள்


ADDED : பிப் 19, 2025 04:02 AM

Google News

ADDED : பிப் 19, 2025 04:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செடிகளால் பாலத்தில் விரிசல் : திண்டுக்கல்- நத்தம் ரோடு ரயில்வே மேம்பாலத்தில் செடிகள் வளர்ந்துள்ளதால் பாலத்தில் விரிசல் ஏற்படுகிறது.பாலத்தில் செடிகள் பெரிய மரமாக ஆவதற்கு முன் இச் செடிகளை அகற்ற துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

---பெரியசாமி, நாகல்நகர்.

சேதமான மின் கம்பம் : கோபால்பட்டி இந்திராநகர் அங்கன்வாடி மையம் அருகே மின்கம்பம் முழுவதும் சேதமடைந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் விபத்து அபாயம் உள்ளது. குழந்தைகள் உள்ள பகுதி என்பதால் மின் கம்பத்தை மாற்ற வேண்டும்.

-சவுந்தர பாண்டியன், கோபால்பட்டி.

மெகா பள்ளத்தால் விபத்து : வடமதுரை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் காணப்பாடி ரோட்டில் வேக தடையை யொட்டி மெகா பள்ளம் ஏற்பட்டுள்ளது.டூவீலர்கள் விபத்தில் சிக்கி கீழே விழும் நிலை அடிக்கடி நடக்கிறது. இதை சீரமைக்க வேண்டும்.

----பாலமுரளி, வடமதுரை.

நாய்களால் தொல்லை : ஒட்டன்சத்திரம் நகராட்சி சின்னகுளம் தெற்கு பகுதியில் இறைச்சி கழிவுகளை கோனி பைகளில் கொண்டு வந்து கொட்டுகின்றனர்.அவற்றை உண்ணவரும் நாய்களால் அப்பகுதியில் நடமாட அச்சமாக உள்ளது. இதனை அகற்ற வேண்டும்.-

-சிவா, ஒட்டன்சத்திரம்.

-----------குச்சியை அகற்றாதால் விபத்து : திண்டுக்கல் - தாடிக்கொம்பு ரோட்டில் கொடிக்கம்பம் நடுவதற்கு கட்டப்பட்ட குச்சியை அகற்றப்படாமல் உள்ளதால் விபத்து அபாயம் உள்ளது .வாகனங்கள் ஓரமாக செல்லும்போது உரசி காயங்கள் ஏற்படுகிறது . இதை தடுக்க வேண்டும்.

-மனோஜ், திண்டுக்கல்.

கழிவு நீரால் சுகாதாரக்கேடு : ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் குட்டத்துப்பட்டி ஊராட்சி முத்தனம்பட்டியில் போதிய வடிகால் வசதியின்றி தெருக்களில் கழிவு நீர் தேங்கி சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.இதன் காரணமாக நோய்தொற்றால் பலரும் பாதிக்கும் நிலையும் உள்ளது.

--ஜி.முத்துவடிவேல், முத்தனம்பட்டி.

ரோட்டில் குப்பை குவிப்பு : -------தாண்டிக்குடி கரியமால் கோயில் செல்லும் குடியிருப்பு பகுதியில் ரோட்டில் குப்பை குவிப்பதால் சுகாதாரக்கேடு,நோய் தொற்று அபாயம் உள்ளது. ஊராட்சி நிர்வாகம் குப்பையை அகற்ற உடனடயாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஐயப்பன், தாண்டிக்குடி.






      Dinamalar
      Follow us