/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அலட்சியத்தால் நெரிசல், விபத்துக்கள் சின்னாளபட்டியில் சிக்கித்தவிக்கும் வாகன ஓட்டிகள்
/
அலட்சியத்தால் நெரிசல், விபத்துக்கள் சின்னாளபட்டியில் சிக்கித்தவிக்கும் வாகன ஓட்டிகள்
அலட்சியத்தால் நெரிசல், விபத்துக்கள் சின்னாளபட்டியில் சிக்கித்தவிக்கும் வாகன ஓட்டிகள்
அலட்சியத்தால் நெரிசல், விபத்துக்கள் சின்னாளபட்டியில் சிக்கித்தவிக்கும் வாகன ஓட்டிகள்
ADDED : அக் 17, 2025 01:48 AM

சின்னாளபட்டி: சின்னாளபட்டியில் ரோட்டோர ஆக்கிரமிப்புகள், கட்டுப்பாடின்றி நிறுத்தப்படும் வாகனங்களால் நெரிசல், விபத்துக்கள் அதிகரித்து வருகிறது. பெயரளவில் அகற்ற நோட்டீஸ் வழங்கலுடன் கண்டுகொள்ளாத நெடுஞ்சாலைத்துறை, சீர்படுத்தலை தவிர்க்கும் போலீஸ் அதிகாரிகளால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர்.
திண்டுக்கல் -மதுரை நான்கு வழிச்சாலை மேம்பாலம் முதல் சின்னாளபட்டி பஸ் ஸ்டாண்ட், காமராஜர் சாலை, தேவாங்கர் பள்ளி ரோடு, பேங்க் ரோடு பகுதிகளில் ரோடு விரிவாக்க பணியை 2 ஆண்டுகளுக்கு முன் நெடுஞ்சாலைத்துறை துவங்கியது.
பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ. 5 கோடி மதிப்பிலான இப்பணியில் ரோட்டின் இருபுறமும் கழிவுநீர் செல்வதற்கான அகலப்படுத்தப் பட்ட வடிகால் வசதியுடன் ரோடு விரிவாக்கம் நடந்தது. பெரும்பாலான இடங்களில் பெயரளவில் கால்வாய், ரோடு அகலப்படுத்தும் பணிகள் நடந்தது. ஆமை வேகத்தில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு ஒருவழியாக பணி முடிந்தும் சாரல் மழைக்கே பல இடங்களில் மழைநீர் தேங்கி வாகன ஓட்டிகளை சிரமப்படுத்தி வருகிறது.
ரோட்டோர கடைகள் முன்பு டூவீலர்களை நிறுத்துவதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. ரோடு விரிவாக்கம் செய்யப்பட்ட போதும் சின்னாளபட்டி விலக்கு பகுதியில் இருந்து பஸ் ஸ்டாண்ட் வரை எதிரெதிரே வாகனங்கள் கடந்து செல்வதில் சிரமம் ஏற்படுகிறது.மெயின்ரோட்டில் இருந்து பூஞ்சோலை, தேவாங்கர் பள்ளி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் ரோட்டோரங்களில் டூவீலர்களை கண்ட இடங்களில் நிறுத்துகின்றனர்.
சின்னாளபட்டி விலக்கு, பூஞ்சோலை, பேரூராட்சி பஸ் ஸ்டாப் உள்ளிட்ட பகுதிகளில் ரோட்டில் இருபுறமும் ஆட்டோக்களை நிறுத்தி வைக்கின்றனர்.
சின்னாளபட்டி விலக்கு பகுதியில் இருந்து ஆத்துார், செம்பட்டி செல்லும் போதும் அங்கிருந்து திண்டுக்கல் நோக்கி திரும்பி செல்லும் போதும் இவை போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது.
நெரிசலை காரணம் கூறி அரசு பஸ் ஊழியர்கள் பஸ் ஸ்டாண்டை புறக்கணித்து செல்கின்றனர்.
வெகுநேரம் பஸ் ஸ்டாண்டில் காத்திருக்கும் பயணிகள், ஏமாற்றத்துடன் தனியார் பஸ்களின் வருகையை எதிர் நோக்கும் அவல நிலை தொடர்கிறது.