/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
எம்.ஆர்.பி. செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்
/
எம்.ஆர்.பி. செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : அக் 15, 2024 05:53 AM

திண்டுக்கல்: நோயாளிகள் செவிலியர் விகிதாசாரப்படி தமிழக முழுவதும் 23 ஆயிரம் செவிலியர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
எம்.ஆர்.பி., செவிலயர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களை உடனடியாக நிரப்பி கால முறை ஊதியம் வழங்க வேண்டும்.காலமுறை ஊதியம் வழங்குவதற்கு தேர்வு செய்யப்பட்ட 1300 செவிலியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் அருகே தமிழ்நாடு எம்.ஆர்.பி., செவிலியர்கள் மேம்பாட்டுச் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்க மாவட்ட தலைவர் ரோஸ் தனம் தலைமை வகித்தார். வட்டக் கிளை செயலர் ஜீவரத்தினம், மாவட்ட செயலாளர் லுாமன் சத்தியா, அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் முபாரக் அலி, வருவாய் துறை சங்க மாவட்ட செயலாளர் சுகந்தி, பொது சுகாதாரத்துறை சங்க மாவட்ட தலைவர் வல்லவன், மாநில செயலாளர் ஜெசி பங்கேற்றனர். மாவட்ட பொருளாளர் அருள் மேரி நன்றி கூறினார்.