/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கோயில் விழாவுக்காக முளையூர் கண்மாயில் பிடிமண் எடுப்பு
/
கோயில் விழாவுக்காக முளையூர் கண்மாயில் பிடிமண் எடுப்பு
கோயில் விழாவுக்காக முளையூர் கண்மாயில் பிடிமண் எடுப்பு
கோயில் விழாவுக்காக முளையூர் கண்மாயில் பிடிமண் எடுப்பு
ADDED : மே 03, 2025 04:57 AM
சாணார்பட்டி : கோபால்பட்டி அருகே எஸ்.கொடையில் மதுரை வீரன், காளியம்மன், பகவதி அம்மன், கன்னிமார், ஆண்டிச்சாமி, வேட்டைக்காரன் சுவாமிகளின் திருவிழா ஜீனில் நடைபெற உள்ளது.
இதனை முன்னிட்டு நேற்று காலை கிராம மக்களால் முளையூர் கண்மாயில் சுவாமி செய்வதற்கான பிடிமண் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக எஸ்.கொடையை சேர்ந்த ஆண்கள், பெண்கள், இளைஞர், என ஆயிரத்துக்கு மேற்பட்டோர் மாட்டு வண்டி, வேன், ஆட்டோ,டிராக்டர், லாரிகளில் வாழை இலை தோரணங்கள் கட்டி ஆடல், பாடலுடன் முளையூர் சென்று அங்குள்ள கண்மாயில் பிடிமண் எடுத்து வந்தனர்.
3 ஆண்டுக்கு ஒரு முறை நடைபெரும் இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கிராமத்தினர் உற்சாகமாக செய்து வருகின்றனர்.