ADDED : பிப் 25, 2026 05:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் வெண்டைக்காய் விலை ஒரே வாரத்தில் கிலோ ரூ.35 லிருந்து ரூ.23 ஆக குறைந்ததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒட்டன்சத்திரம் சுற்றியுள்ள கிராமங்களில் வெண்டைக்காய் அதிகமாக விளைவிக்கப்படுகிறது. தற்போது பல இடங்களில் அறுவடை மும்முரமாக இருப்பதால் மார்க்கெட்டிற்கு வரத்து அதிகரித்து உள்ளது. ஆனால் ரம்ஜான் நோன்பு காரணமாக வியாபாரிகள் கொள்முதல் அளவை குறைத்ததால் வெண்டைக்காய் விலை சரிந்துள்ளது. கடந்த வாரம் கிலோ ரூ.35க்கு விற்ற நிலையில் நேற்று ரூ.23க்கு விற்பனையானது. விலை சரிவால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வியாபாரிகள் கூறுகையில் 'ரம்ஜான் முடிந்து அடுத்து வரும் நாட்களில் தான் காய்கறிகள் விலை அதிகரிக்கும்' என்றனர்.

