/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பார்க்கிங் செய்த பஸ்சால் சாக்கடை கட்டுமானம் சேதம்; நகராட்சி கமிஷனர் எச்சரிக்கை

ADDED : நவ 16, 2025 03:30 AM

கொடைக்கானல். நவ.16--: - கொடைக்கானல் நாயுடுபுரத்தில் சுற்றுலா பஸ் பார்க்கிங் செய்ததால் சாக்கடை கட்டுமானம் சேதமடைந்தது.
கொடைக்கானலுக்கு நாள்தோறும் ஏராளமான பயணிகள் வருகின்றனர். இந்நிலையில், பெரும்பாலான விடுதிகளில் பார்க்கிங் வசதியின்றி ரோட்டோரம் நிறுத்தும் போக்குள்ளது. நாயுடுபுரத்திலிருந்து விநாயகர் கோயில் வரை நகராட்சி, புதிய சாக்கடை கட்டமைக்கும் பணியை ஒரு வாரமாக மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே இங்குள்ள விடுதிகளுக்கு வரும் சுற்றுலா வாகனங்கள் தாழ்வான ரோட்டில் விபத்து அபாயத்தில் பார்க்கிங் செய்வதை வாடிக்கையாக செய்து வருகின்றனர். இரு தினங்களுக்கு முன் கட்டடப்பட்ட சாக்கடையில் பஸ்சை பார்க்கிங் செய்து சேதப்படுத்தினர். தொடர்ந்து பணிகளுக்கு இடையூறான இச்செயல்களை விடுதியினர் கண்டுகொள்ளாததால் தொடர் சேதம் ஏற்பட்டது.
கமிஷனர் சங்கர், கூறுகையில்: நாயுடுபுரத்தில் உள்ள தங்கும் விடுதிகளுக்கு வரும் வாகனங்கள் தங்களது இடங்களில் வாகனங்களை நிறுத்த வேண்டும். நகராட்சி கட்டுமானம் மேற்கொள்ளும் இடங்களில் வாகனங்களை நிறுத்தி பொது சொத்துக்கு சேதம் ஏற்படுத்தும் போக்கு உள்ளது. இது போன்று செயல்படும் பஸ் உள்ளிட்ட வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும். மீறும் நிலையில் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.