/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கார் மீது மினிலாரி மோதல் பேரூராட்சி அலுவலர் காயம்
/
கார் மீது மினிலாரி மோதல் பேரூராட்சி அலுவலர் காயம்
ADDED : ஏப் 24, 2025 06:24 AM
செம்பட்டி: வத்தலகுண்டு தெற்கு தெருவை சேர்ந்தவர் கல்பனா தேவி 55. கன்னிவாடி பேரூராட்சி செயல் அலுவலராக பணியாற்றி வருகிறார்.
நேற்று தனது காரில் வத்தலகுண்டில் இருந்து செம்பட்டி நோக்கி புறப்பட்டார். இவரது மகன் கோகுல்நாத் 33, காரை ஓட்டி வந்தார். திண்டுக்கல்- குமுளி ரோட்டில் புல்வெட்டி கண்மாய் அருகே வந்தபோது எதிரே வந்த மினி வேனை மினி லாரி முந்தி செல்ல முயன்றது.அப்போது கார் மீது மோதிய லாரி அடுத்தடுத்து மினி வேன் மீதும் மோதியது. 3 வாகனங்களும் விபத்துக்குள்ளாகின.
பேரூராட்சி செயல் அலுவலர் கல்பனாதேவி, அவரது மகன் கோகுல்நாத், மினி லாரியை ஓட்டி வந்த ஈரோடு மாவட்டம் அந்தியூர் சென்னம்பட்டி சங்கர் 40, மினிவேன் டிரைவர் திண்டுக்கல் பால விக்னேஷ் 31, உடன் வந்த ரெட்டியார்சத்திரம் கே.புதுக்கோட்டை சக்திவேல் 55, ஆகியோர் காயமடைந்தனர். செம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

