/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
காயத்துடன் இறந்த முதியவர் கொலை: 3 வாலிபர்கள் கைது
/
காயத்துடன் இறந்த முதியவர் கொலை: 3 வாலிபர்கள் கைது
ADDED : ஏப் 23, 2025 05:30 AM
திண்டுக்கல் திண்டுக்கல் மேற்கு ரத வீதியில் மண்பானை கடையின் அருகே காயமடைந்து இறந்து கிடந்த ஞானசேகர் 70, கொலை செய்யப்பட்டது தெரியவர 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
ரெட்டியார் சத்திரத்தை சேர்ந்தவர் ஞானசேகர். திண்டுக்கல் மேற்கு ரத வீதி பின்புறம் உள்ள ராமமூர்த்தி மண்பானை கடையில் பணிபுரிந்தார். அதன் அருகே ரோட்டோரத்தில் தங்கி வந்தார்.
நேற்று முன்தினம் காலை 10:00 மணிக்கு நெற்றில் காயம், மூக்கில் ரத்தம் வழிந்த நிலையில் ஞானசேகர் இறந்து கிடந்தார்.
இவரின் உடலை மீட்ட வடக்கு போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிந்து விசாரித்தனர்.
அப்பகுதி சி.சி.டி.வி., பதிவுகளை ஆய்வு செய்ததில் திண்டுக்கல் லைன் தெருவை சேர்ந்த விஜய பிரகாஷ் 24, ராஜன் 26, காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ரஞ்சித் குமார் 27, ஞானசேகரை அடித்து கொலை செய்தது தெரிந்தது.இவர்கள் மூவரையும் இன்ஸ்பெக்டர் வினோதா தலைமையிலான போலீசார் கைது செய்தனர். இவர்களது டூவீலரையும் பறிமுதல் செய்தனர்.

