/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வடமதுரை பெருமாள் கோயில் திருவிழாவில் இன்று முத்துப்பல்லக்கு
/
வடமதுரை பெருமாள் கோயில் திருவிழாவில் இன்று முத்துப்பல்லக்கு
வடமதுரை பெருமாள் கோயில் திருவிழாவில் இன்று முத்துப்பல்லக்கு
வடமதுரை பெருமாள் கோயில் திருவிழாவில் இன்று முத்துப்பல்லக்கு
ADDED : ஆக 11, 2025 04:02 AM
வடமதுரை: வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயில் ஆடித்திருவிழாவில் இன்றிரவு வசந்தம் முத்துப்பல்லக்கு நிகழ்ச்சி நடக்கிறது.
இக்கோயிலில் ஆடி மாத பவுர்ணமியையொட்டி ஆண்டுதோறும் 13 நாள் திருவிழா நடக்கிறது. இந்தாண்டு ஆடித்திருவிழா ஆக.1ல் துவங்கி நாளைமறுநாள் வரை நடக்கிறது.
நாள்தோறும் மண்டகபடிதாரர் வழிபாட்டில் பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடந்து வருகிறது.
முக்கிய நிகழ்ச்சிகளாக ஆக.7ல் திருக்கல்யாணம், ஆக.9ல் தேரோட்டம் நடந்தது.
13 நாள் திருவிழாவில் அதிகளவில் பக்தர்கள் பங்கேற்கும் வசந்தம் முத்துப்பல்லக்கு இன்றிரவு நடக்கிறது. சன்னதியில் இருந்து முத்துபல்லக்கில் புறப்படும் சுவாமி இரவு முழுதும் நகரை வலம் வந்து நாளை அதிகாலை சன்னதி திரும்புவார்.